சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

SWOAD

வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடல் – 22.12.2023

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கள மட்டச் செயற்பாட்டு முன்னேற்றங்கள் குறித்த வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடலானது இன்று 22.12.2023ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் 2023

18.12.2023 ம் திகதி VOM (Voice of Migration) ஏற்பாட்டில் கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் புலம்பெயர் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் விசேட அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ Manusha Nanayakkara மற்றும் SDC, Helvetas, Solitaries போன்ற நிதி நிறுவன பிரதிநிதிகளும், ஏனைய சிவில் அமைப்புக்களும் பங்குபற்றியிருந்தனர். இதில் சுவாட் அமைப்பின் சார்பில் திரு.ச. ஆனந்தராசா மற்றும் சம்மாந்துறை, இறக்காமம் புலம்பெயர் சங்கத்தலைவிகளும் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் படிக்க

வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடல் – 15.12.2023

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கள மட்டச் செயற்பாட்டு முன்னேற்றங்கள் குறித்தும், Task அடிப்படையிலான முன்னேற்றம் குறித்தும் வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடலானது இன்று 15.12.2023ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு சுவாட் அமைப்பின் தலைவி திருமதி. கஜேந்தினி சுவேந்தினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இம்மாத இரண்டாம் வாரத்திற்கான செயற்பாட்டு முன்னேற்றங்கள் குறித்து சமர்ப்பணம் செய்தனர்.
மேலும் படிக்க

வாய்ப்பை பயன்படுத்தி சுயதொழிலில் முன்னேறியமை

இன்ஸ்பெக்டர் ஏத்தத்தை சேர்ந்த சிற்றம்பலம் செல்லம்மா என்பவருக்கு 5பிள்ளைகள் அதில் 3வது மகளாக பிறந்தவர். தான் மஞ்சுளா இவர்கள் மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்தவர். தந்தை கூலிவேலை செய்தே குடும்பத்தை நடாத்தி வந்தார். சிறிது காலத்தின் பின் 90ம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக இவரது தந்தை மற்றும் சகோதரர் காணாமல் போயுள்ளார்கள். இது இவர்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பாக காணப்பட்டது. அதன் பின்பு இவரது தாயார் கூலி வேலை செய்து…
மேலும் படிக்க

குழுக்களின் மேம்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பிலானா குழுத் தலைவிகளுடனான கலந்துரையாடல்

குழுக்களின் மேம்பாடு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் சுவாட் சுயசார்புக் குழுத் தலைவிகளுடனான கலந்துரையாடலானது இன்று 04.12.2023ம் திகதி திங்கட் கிழமை காலை 10.00 மணிக்கு Teams செயலியினூடாக இணைப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் நடாத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் குழுத்தலைவிகள், பிரதேச முகாமையாளர்கள், முகாமைத்துவசபை உறுப்பினர்கள் மற்றும் பிராந்திய இணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

அனுபவங்கங்களை கற்றுக் கொள்ளும் முகமாக நுவரெலியா மாவட்டத்தில் பணிபுரிகின்ற PREDO நிறுவனத்தினர் கள விஐயம்

SWOAD நிறுவனத்தின் கீழ் இயங்கிவருகின்ற புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் அனுபவங்களை கற்றுக் கொள்ளும் முகமாக ஹற்றன் நுவரேலியா மாவட்டத்தில் பணிபுரிகின்ற PREDO நிறுவனத்தின் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கடந்த 02.12.2023ம் திகதி சம்மாந்துறைப்பிரதேசத்தில் கள விஐயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சுவாட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் குறிப்பாக சுவாட் நிறுவனத்தின் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் செயற்பாடுகள் ,…
மேலும் படிக்க

வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடல் – 01.12.2023

சுவாட் அமைப்பின் செயற்பாடுகள் குறித்தும், Task அடிப்படையிலான முன்னேற்றம் குறித்த வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடலானது இணைப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் Teams செயலியினூடாக இன்று 01.12.2023ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் சுவாட் அமைப்பின் தலைவி திருமதி. கஜேந்தினி சுவேந்தினி அவர்களும் மற்றும், முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

SWOAD இன் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ விடயங்களை நடைமுறையில் அறிந்து கொள்வதற்காக Action Unity Lanka விஜயம் செய்திருந்தது.

Action unity Lanka நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்கள் நல் ஆளுகை (Good Governance) குறித்து கற்றுக்கொள்ளல் மற்றும் சுவாட் அமைப்பின் செயற்பாடுகள், நடைமுறைகள் குறித்த அனுபவப்பகிர்வினை மேற்கொள்ளும் பொருட்டு இன்று 28.11.2023ம் திகதி சுவாட் தலைமையலுவலகத்திற்கு சமூகமளித்திருந்தனர். இந்நிகழ்வில் சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களும் மற்றும் முகாமைத்துவசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிறுவன ரீதியான செயற்பாடுகள் குறித்தும், கண்காணிப்பு முறைமைகள் குறித்தும் நல்லாட்சியில் இவை எவ்வாறு பங்களிப்புச்…
மேலும் படிக்க

திட்ட விரிவாக்கம் குறித்து விவாதிக்க 22.11.2023 அன்று ஒரு கூட்டம் கூட்டப்பட்டது

திட்ட விரிவாக்கம் பற்றி SWOAD அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் சுவாட் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் சுவாட் அமைப்பின் தலைவி திருமதி. கஜேந்தினி சுவேந்திரன் மற்றும் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச முகாமையாளர்கள் , களஉத்தியோகத்தர்கள் ஆகியோரும் மற்றும் தலைமையலுவலக முதன்மைப் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க

திட்ட விரிவாக்கம் பற்றி விவாதிக்க ASI ஒருங்கிணைப்பாளர் WORD க்கு வருகை தந்தார்

இலங்கையில் நிலையான நிர்மாணக் கட்டமைப்பை உருவாக்கும் அலையன்ஸ் ஃபார் சஸ்டைனபிள் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (ஏஎஸ்ஐ) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.சமந்த அபேவிக்ரம அவர்கள் இன்று 21.11.2023 அன்று SWOAD க்கு விஜயம் செய்து இந்தக் கட்டமைப்பின் விரிவாக்கம் குறித்து விவாதித்தார். இந்நிகழ்வில், SWOAD அமைப்பின் ஸ்தாபகர் திரு.எஸ்.செந்துராசா, நிர்வாக சபை உறுப்பினர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி எஸ்.அனுசியா, திருக்கோவில் வலய ஓய்வுபெற்ற மேலதிக கல்விப் பணிப்பாளர் கே.கமலதேவி, தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்…
மேலும் படிக்க