சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

SWOAD

பணியாளர் கொள்திறன் மேம்பாட்டுப் பயிற்சி.

பணியாளர்களின் செயற்திறனை மேம்படுத்துவதன் ஊடாக கிராம மட்டத்தில் அங்கத்துவ குடும்பங்களின் தொழில்விருத்திக்குத் தேவையான வழிகாட்டல், ஆலோசனைகளை வழங்கி அவர்களின் தொழில் ரீதியான வருமானத்தை அதிகரிப்பதனூடாக பொருளாதாரத்தை அபிவிருத்தியடையச் செய்யும் நோக்கில் மக்களுடன் கிராம மட்டத்தில் இணைந்து பணியாற்றுகின்ற களப் பணியாளர்கள் மற்றும் பிரதேச முகாமையாளர்களுக்கு தேவையான வியாபாரத்திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சியானது சுவாட் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திரு.க.பிறேமலதன் அவர்களினால் 24.06.2024ம் திகதி சுவாட் தலைமையலுவலகத்தில் நடாத்தப்பட்டது. இப்பயிற்சியில் சகல…
மேலும் படிக்க

திட்டமிடல் கலந்துரையாடல். – 13.06.2024

சுவாட் அமைப்பின் எதிர்கால செயற்திட்டங்கள், கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்த உபாயத் திட்டமிடல் குறித்த கலந்துரையாடலானது 13.06.2024ம் திகதி சுவாட் தலைமை அலுவலகத்தில் ஸ்தாகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதேசமட்ட, தலைமையலுவலக சகல பணியாளர்களும் கலந்துகொண்டு நிறுவன மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து தமது கருத்துக்களை முன்வைத்ததுடன், செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் சவால்கள், பிரச்சினைகள் குறித்தும் பிரதேச ரீதியாக ஆராயப்பட்டு அவற்றுக்கான மாற்று உபாயத்திட்டங்கள் குறித்தும்…
மேலும் படிக்க

வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சுயதொழிலுக்கான கடன் உதவி வழங்கல்.

வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 09 அங்கத்தவர்களுக்கு அவர்களின் சுயதொழிலை மேம்படுத்தும் முகமாக சுவாட் அமைப்பினால் கடன் உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது 12.06.2024 ம் திகதி சுவாட் சம்மாந்துறைப் பிரதேச அலுவலகத்தில் இப்பிரதேச முகாமையாளர் செல்வி.S.Jathursha அவர்களின் தலைமையில் இடம் பெற்றதோடு, இந்நிகழ்வில் மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய அதிபர். திரு. ஆனந்தம் சதானந்தா அவர்கள் பிரமுகராக கலந்துகொண்டு தற்போதைய கால சூழலில் சுய தொழிலின் முக்கியத்துவம்…
மேலும் படிக்க

திட்ட பிரதிபலிப்பு மற்றும் பகிர்வு

Helvetas நிதி நிறுவனத்தின் உதவியுடன் அம்பாறை மாவட்டத்தில் சுவாட் நிறுவனத்தினால் கடந்த 2021ஃ2022ம் ஆண்டுகளில் அமுல்படுத்தப்பட்ட திட்டமான வன்முறை தீவிரவாத்திற்கு எதிராக மாணவர்களின் மீளெழும் தன்மையை கட்டியெழுப்பும் நோக்கில் பாடசாலை மாணவர்களை இலக்குக் குழுக்களாகக் கொண்டு செயற்படுத்தப்பட்ட திட்டத்தின் Project Reflection and Sharing கலந்துரையாடல் ஒன்று கடந்த 11.06.2024ம் திகதி கொழும்பில் உள்ள சினமன் நட்சத்திர கோட்டலில் இடம்பெற்ற போது சுவாட் நிறுவனத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டு திட்டம்…
மேலும் படிக்க

பிரதேச ரீதியான கள விஜயமும், குழுத்தலைவிகளுடனான கலந்துரையாடலும் – 24.02.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்த பிரதேச மட்ட கண்காணிப்பு நடவடிக்கையானது சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச கள விஜயமானது 24.02.2024ம் திகதி மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது இடம்பெற்ற குழுத்தலைவிகளுடனான சந்திப்பில் சுவாட் அமைப்பின் தலைவி திருமதி.கஜேந்தினி சுவேந்திரன் அவர்களும், சுவாட் அமைப்பின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் திரு.க.பிறேமலதன் அவர்களும் மற்றும் சமூக அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் திரு.S.ஆனந்தராசா, பிராந்திய…
மேலும் படிக்க

திட்டமிடல் கலந்துரையாடல் – 23.02.2024

23.02.2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை சுவாட் அமைப்பின் பணியாளர்களுடனான திட்டமிடல் கலந்துரையாடலானது ஸ்தாகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் சுவாட் தலைமையலுவலக பயிற்சி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கிராம மட்டத்தில் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிறுவன ரீதியான செயற்பாடுகளுக்கான முன்னேற்றங்களை குறிகாட்டிகளுடன் அடைவுகளை கண்டுகொள்ளத்தக்கதாக எவ்வாறு ஒவ்வொரு பணியாளரும் தமது செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும் என்பது குறித்த தெளிவூட்டலும், அவற்றை செயற்படுத்துவதில் எதிர்நோக்கும்…
மேலும் படிக்க

வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடல் – 16.02.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கள மட்டச் செயற்பாட்டு முன்னேற்றங்கள் குறித்த வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடலானது இன்று 16.02.2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் Teams இணைய செயலியினூடாக இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

முகாமைத்துவசபைக் கலந்துரையாடல்.- 15.02.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளில் மேம்படுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்த கலந்துரையாடலானது 15.02.2024ம் திகதி சுவாட் தலைமையலுவலகத்தில் ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் Teams செயலியினூடாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உருப்பினர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

பிரதேச ரீதியான கள விஜயமும், குழுத்தலைவிகளுடனான கலந்துரையாடலும் – 10.02.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்த பிரதேச மட்ட கண்காணிப்பு நடவடிக்கையானது சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக காரைதீவு மற்றும் கல்முனை பிரதேச கள விஜயமானது 10.02.2024ம் திகதி மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது இடம்பெற்ற குழுத்தலைவிகளுடனான சந்திப்பில் சுவாட் அமைப்பின் தலைவி.திருமதி.கஜேந்தினி சுவேந்திரன் அவர்களும் மற்றும் பிராந்திய இணைப்பாளர். திரு.நிரோசாந்தன், திரு.சதீஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

பிரதேச ரீதியான கள விஜயமும், குழுத்தலைவிகளுடனான கலந்துரையாடலும் – 02.02.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்த பிரதேச மட்ட கண்காணிப்பு நடவடிக்கையானது 02.02.2024ம் திகதி பொத்துவில் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும் இணைப்பாளருமான திரு.ச.செந்தூராசா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதேச மட்டத்தில் நடைபெறுகின்ற செயற்பாட்டுகள் குறித்த முன்னேற்றங்கள், காணப்படும் குறைபாடுகள், பிரச்சினைகள் குறித்தும் அவை தொடர்பில் குழுத் தலைவிகள், நிர்வாகிகள், களமட்டப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைககள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் சுவாட் அமைப்பின் தலைவி.திருமதி.கஜேந்தினி சுவேந்திரன்…
மேலும் படிக்க