Action unity Lanka நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்கள் நல் ஆளுகை (Good Governance) குறித்து கற்றுக்கொள்ளல் மற்றும் சுவாட் அமைப்பின் செயற்பாடுகள், நடைமுறைகள் குறித்த அனுபவப்பகிர்வினை மேற்கொள்ளும் பொருட்டு இன்று 28.11.2023ம் திகதி சுவாட் தலைமையலுவலகத்திற்கு சமூகமளித்திருந்தனர். இந்நிகழ்வில் சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களும் மற்றும் முகாமைத்துவசபை உறுப்பினர்களும் கலந்து கொண்டு நிறுவன ரீதியான செயற்பாடுகள் குறித்தும், கண்காணிப்பு முறைமைகள் குறித்தும் நல்லாட்சியில் இவை எவ்வாறு பங்களிப்புச் செய்கின்றது என்பது குறித்தும் தமது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.