வெள்ள அனர்த்த அவசரகால செயற்திட்டத்தின் கீழ் Oxfam அமைப்பின் நிதி உதவியுடன் ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 650 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களும், 2419 குடும்பங்களுக்கு உடல் சுகாதார மேம்பாட்டிற்கான பொதிகளும், 1037 குடும்பங்களுக்கு தண்ணீர் வடிகட்டி பாத்திரமும் இப்பிரதேச செயலகங்களின் ஊடாக கிராம சேவையாளர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளன.