சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

இலவச மருத்துவ முகாம் வழங்கப்பட்டது.

மருத்துவ முகாம்களின் மூலம் 557 முதியோருக்கு 400 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், 51 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதோடு, கண்சத்திரசிகிச்சைக்கென இனங்காணப்பட்ட 28 முதியவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

105 மூத்த குடிமக்களுக்கு 1,285,000.00 ரூபாய் கடன் உதவி வழங்குதல்

2006ம் ஆண்டு முதியோர் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 105 முதியவர்களுக்கு கோழிவளர்ப்பு, சிறுவியாபாரம், விவசாயம், ஆகிய தொழில்களில் ஈடுபடுவதற்கான 1,285,000.00 ரூபா கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

81 இளம் பெண்களுக்கு தையல் தொழில் தொடங்குவதற்கு வசதியாக கடன் வழங்கப்பட்டது

2006ம் ஆண்டு வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கோமாரி, விநாயகபுரம், வளத்தாப்பிட்டி ஆகிய கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 81 யுவதிகளை உள்ளிணைத்து தையல் கூடம் அமைக்கப்பட்டு தொழிலுக்கான தையல் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கடனுதவியாக 800,000.00 ரூபாய் சுவாட் அமைப்பினால் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

தொழில்துறை உபகரணங்கள் விநியோகம் மூலம் சமூகங்களை மேம்படுத்துதல்

2006ம் ஆண்டு சுனாமியால் தொழில் பாதிக்கப்பட்ட பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்ப்பட்ட 287 பேருக்கு 18 இலட்சம் ரூபா பெறுமதியான தொழிலுபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க

திருக்கோவிலில் சர்வதேச மகளிர் தின விழா

திருக்கோவில் பிரதேசத்தில் சர்வதேச மகளீர் தினம் தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தில் 2006.03.12 ம் திகதி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் 700 – 800 அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர். அத்தோடு குழுத்தலைவிகளும், அதிக சேமிப்புள்ள அங்கத்தவர்களும் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் படிக்க