சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

“ சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வியாபாரத் திட்டமிடல்” தொடர்பான விழிப்புணர்வு.

10,07.2019ம் திகதி பொத்துவில் பிரதேச குண்டுமடு கிளையில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி- ஜீவதர்சினி கருணாகரன் அவர்களைக் கொண்டு சுயதொழில் முயற்சியாளர்கள் 31 பேருக்கு வியாபாரத்திட்டமிடல் தொடர்பானவிழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

28.7.20219 அன்று “குழந்தைகள் பாதுகாப்பு” பற்றிய விழிப்புணர்வு

28.07.2019ம் திகதி காரைதீவு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கலாச்சார உத்தியோகத்தர் திருமதி.ச.சிவலோஜினி அவர்களைக் கொண்டு ஆதிசிவன் அறநெறி பாடசாலை மாணவர்கள் 35 பேருக்கும், விஸ்ணு அறநெறி பாடசாலை மாணவர்கள் 45 பேருக்கும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

22.07.2019 அன்று குழந்தை பராமரிப்பு உளவியல் ஆலோசனைக்கான வழிகாட்டுதல்

பிள்ளை பராமரிப்பின்போது பெற்றோர்களின் கோபம், மற்றும் செயற்பாடுகள் காரணமாக பிள்ளைகளுக்கு ஏற்படக்கூடிய உளநலப் பாதிப்புக்கள் குறித்து உளநல ஆலோசகர் திருமதியு.சு.பௌமியாஅவர்களைக்கொண்டு 22.07.2019ம ; திகதி கல்முனைப் பிரதேசத்தில் பெரியநீலாவணை கிளையில் 25பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

பிள்ளைகளின் உயர்கல்வி, தொழில் பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு.

28.05.2019ம் திகதி கல்முனைப் பிரதேசத்தில் பிள்ளைகளின் உயர் கல்வி தொடர்பாகவும் தொழிற்பயிற்சிகள் தொடர்பாகவும். திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.பஸ்லீன் அவர்களைக் கொண்டு 35பேருக்கு வழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது
மேலும் படிக்க

2019 ஆம் ஆண்டு அரசின் உதவியை எவ்வாறு பெறுவது என்பது குறித்த விழிப்புணர்வு

17,19.06.2019ம் திகதிகளில் காரைதீவு பிரதேசத்தில் அரச உதவிகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பாக SSO ஆச.மு.குணரெட்ணம் அவர்களைக் கொண்டு 125 பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

ஜூன் 25 அன்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு 47 பங்கேற்பாளர்களுக்கு நடைபெற்றது

25.06.2019ம் திகதி சம்மாந்துறை பிரதேசத்தில் புகைத்தல் மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக சமூக சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் Mrs.ஜெகநாதன், RDO Mrs.ரசிட் முகமட் அவர்களைக் கொண்டு 47பேருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு நடாத்தப்பட்டுள்ளது
மேலும் படிக்க

SWOAD அமைப்பு கிராமங்களில் 36 விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தியது.

கிராம மட்டத்தில் துரைசார் நிபுணர்களை அழைத்து அவர்களினால் வழங்கப்படும் சேவைகள் குறித்தும், அவற்றை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் குறித்தும் விப்புணர்வுகருத்தரங்குகள் சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனூடாக கிராம மட்டங்களில் அடையாளம் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு இலகுவில் துறைசார் உத்தியோகத்தர்களை அணுகி தீர்வுகாண்பதற்கும், அவர்களுடனான சிறந்த தொடர்பை ஏற்படுத்திகொள்ளக்கூடியதற்குமான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமைப்பின் செயற்பாட்டு பிரதேசங்களான 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்வருடம் 36 விழிப்புணர்வு கருந்தரங்குகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் இதில்…
மேலும் படிக்க

SWOAD 2019 இல் 3,335 கிளைகள் மற்றும் 72 பிரதேச கூட்டங்களை நடத்தியது.

அங்கத்தவரது குடும்ப முன்னேற்றத்திற்கும், கிராம, சமூக,பொருளாதார முன்னேற்றத்திற்கும் வழிகாட்டும் வகையில் மாதம் ஒரு தடவை 53 கிளைகளிலும் கிளை நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்களும், 6 பிரதேசங்களிலும் பிரதேச நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்களும் நடாத்தப்பட்டு கிளை, பிரதேச ரீதியான செயல் முன்னேற்றங்கள் குறித்தும், சவால்கள், பொதுத் தேவை, பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டு அவற்றுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் இவ்வருடம் 23,106 அங்கத்தவர்கள் பங்குபற ;றுதலுடன் 3,335 கிளைக்கூட்டங்களும்,2,408 பிரதேச நிர்வாகிகளின்…
மேலும் படிக்க

திருக்கோவில் முன்பள்ளி மாணவர்களுக்கான கூட்டு விளையாட்டு நிகழ்வு

ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் கூட்டு முயற்சியாக, திருக்கோவில் பகுதியில் உள்ள SWOAD அமைப்பின் ஏழு முன்பள்ளி மாணவர்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்த ஈர்க்கும் நிகழ்வு மார்ச் 27, 2019 அன்று பிற்பகல் 3:00 மணிக்கு தம்பட்டை லெவன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. திருக்கோவில் பிரதேச முகாமையாளர் திருமதி இ.சம்பவிலோஜினி அவர்களின் திறமையான தலைமைத்துவத்தின் கீழ், இளம் மாணவர்களிடையே தோழமை மற்றும் உடல் செயல்பாடுகளை…
மேலும் படிக்க

SWOAD 77,692,778.00 ரூபாயை 632 தொழில்முனைவோருக்கு கடனாக வழங்குகிறது.

மக்கள் சுய தொழிலில் ஈடுபடுவதன் மூலம் வருமானத்தினை அதிகரித்து அவர்களை சுயமாகச் செயற்பட வைப்பதன் ஊடாக தன்னிறைவான மக்கள் சமூகத்தினை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு சுவாட் அமைப்பின் செயற்பாட்டுப் பிரதேசங்களான காரைதீவு, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி, திருக்கோவில், பொத்துவில் ஆகிய 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 632 பயனாளிகளிக்கு 77,692,778.00 ரூபாய் நிதியானது சேமிப்புக் கடன் திட்டத்தின் கீழ் வாழ்வாதார தொழில்களை மேற்கொள்வதற்கு கடனாக வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க