சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

நிகழ்ச்சித் திட்டங்கள்

335 உயர்நிலை மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துகிறது

கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2006ம் ஆண்டில் க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் திருக்கோவில், நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட 335 மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புகள் சுவாட் அமைப்பினால் நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க

சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 173 பயனாளிகளுக்கு 13 வகையான வளர்ச்சிக்கான தொழில்துறை உபகரணங்களை வழங்குதல்

சுனாமிப் பாதிப்பில் தொழிலுபகரணங்களையும்;, வாழ்விடங்களையும் இழந்த பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனைப் பிரதேச செயலாளர் பரிவுக்குட்பட்ட 173 பயனாளிகளுக்கு 13 விதமான தொழில் விருத்திக்கான 981,500.00 ரூபா பெறுமதியான தொழிலுபகரணங்ககள் Diakonia அமைப்பின் நிதி உதவியுடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சர்வதேச முதியோர் தினம் 30.10.2006 அன்று சிறப்பு நிகழ்வுடன் நினைவுகூரப்பட்டது

சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்புக் கலாசார மண்டபத்தில் 2006.10.30ம் திகதி முதியோர் தினம் வெகு சிறப்பாக அமைப்பினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் செயற்பாட்டுப் பிரதேசங்களுக்குட்பட்ட முதியோர் 400 பேர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் Help Age நிறுவனம் சார்பாக நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சிறீதர் அவர்களும், திட்ட உத்தியோகத்தர் சம்சுடீன் அவர்களும், அமைப்பின் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் படிக்க

இலவச மருத்துவ முகாம் வழங்கப்பட்டது.

மருத்துவ முகாம்களின் மூலம் 557 முதியோருக்கு 400 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் வழங்கப்பட்டதுடன், 51 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதோடு, கண்சத்திரசிகிச்சைக்கென இனங்காணப்பட்ட 28 முதியவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

105 மூத்த குடிமக்களுக்கு 1,285,000.00 ரூபாய் கடன் உதவி வழங்குதல்

2006ம் ஆண்டு முதியோர் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 105 முதியவர்களுக்கு கோழிவளர்ப்பு, சிறுவியாபாரம், விவசாயம், ஆகிய தொழில்களில் ஈடுபடுவதற்கான 1,285,000.00 ரூபா கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

24 மையங்களில் குழந்தைகள் நல தகவல் மையங்களை நிறுவுகிறது

சுனாமியால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் வாழும் 3291 சிறுவர்களை இலக்குக் குழுவாகக் கொண்டு 24 நலன்புரி நிலையங்களில் Unicef நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிறுவர் நற்புறவாடல் தகவல் நிலையம் அமைக்கப்பட்டு சிறுவர்களது வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் நூலகம் அமைக்கப்பட்டதோடு இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க

72 தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல்

சிறுவர் உரிமைச் செயற்றிட்டத்தின் கீழ் சவளக்கடைக் கிராமத்திலுள்ள விநாயகர் பாடசாலையில் வசதி குறைந்த மாணவர்கள் 72 பேருக்கு Fit / CIDA நிறுவன நிதி உதவியுடன் சப்பாத்துக்கள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

2006ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னரான புனரமைப்புப் பணிகள்

2006ம் ஆண்டு சுனாமிக்குப் பின்னான மீள்புனரமைப்பின் நிரந்தர வீடமைக்கும் திட்டத்தின் ஊடாக கல்முனை, காரைதீவுப் பிரதேசங்களில் தலா 6 இலட்சம் ரூபா பெறுமதியான 50 நிரந்தர வீடுகள் Cristain Aid நிறுவன நிதி உதவியுடன் நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டதுடன், Oxfam , ZOA நிறுவனங்களின் நிதி உதவியுடன் சம்மாந்துறை, நாவிதன்வெளி பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 27 பயனாளிகளுக்கு தற்காலிக வீடுகள் அமைத்து வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

81 இளம் பெண்களுக்கு தையல் தொழில் தொடங்குவதற்கு வசதியாக கடன் வழங்கப்பட்டது

2006ம் ஆண்டு வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கோமாரி, விநாயகபுரம், வளத்தாப்பிட்டி ஆகிய கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 81 யுவதிகளை உள்ளிணைத்து தையல் கூடம் அமைக்கப்பட்டு தொழிலுக்கான தையல் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கடனுதவியாக 800,000.00 ரூபாய் சுவாட் அமைப்பினால் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

சுனாமி மற்றும் போர் தாக்கத்திற்கு பிறகு வாழ்வாதாரத்தை உயர்த்துதல்

2006ம் ஆண்டு காரைதீவு, சம்மாந்துறைப் பிரதேசங்களில் சுனாமி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களின் வாழ்கைத்தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு 345 பேருக்கு தொழில் மேம்பாட்டுக்கான தொழில் உபகரணங்கள் Goal நிறுவன நிதி உதவியுடன் SWOAD அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க