சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

நிகழ்ச்சித் திட்டங்கள்

வீடியோ ஆவணப்படுத்தல் மூலம் இளைஞர்களின் சமூக-நிலை மாற்றங்களைப் படம்பிடித்தல்.

இளையோர் நிலைமாற்றல் செயல்திட்டத்தினால் சமூகமட்ட இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ளமாற்றங்கள் குறித்த 11.05.2011ம் திகதி கொழும்பு WUSC தலைமை அலுவலகத்திலிருந்து Gender Officer வருகைதந்து Video Document மூலம் தகவல்களை பெற்று ஆய்வினை மேற்கொண்டார்.
மேலும் படிக்க

அறுவடைக்குப் பிந்தைய கையாளுதல் மற்றும் தரப்படுத்தல் குறித்த பயிற்சி

நாவிதன்வெளி,சம்மாந்துறை, ஆலயடிவேம்பு, பொத்துவில், உகனை ஆகிய பிரதேசங்களில் உள்ள 17 விவசாய சங்கங்களில் உள்ள 30பேர் வீதம் தெரிவு செய்யப்பட்ட 503 விவசாயிகளுக்கு விவசாய உத்தியோகத்தர்களைக் கொண்டு அந்தந்த கிராமங்களில் post harvest handling and grading on vegetable பயிற்சியானது நடாத்தப்பட்டது.  
மேலும் படிக்க

வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்த மண்டல அளவிலான விவாதம்

விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டம் அமுல்படுத்தல் தொடர்பான பிரதேசமட்ட விரிவுரையாக்கக் கலந்துரையாடலானது தெரிவு செய்யப்பட்ட நாவிதன்வெளி, உகண, சம்மாந்துறை, பொத்துவில், ஆலையடிவேம்பு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள பிரதேச செயலகத்தில்; நடாத்தப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் பிரதேச செயலாளர், கிராம சேவகர், சமூர்த்தி உத்தியோகத்தர், விவசாய போதனாசிரியர்கள், விவசாயசங்கத் தலைவர்கள், பெரும்பாக உத்தியோகத்தர், சுனுளு, பிரதேச சபை உறுப்பினர்கள், நில அளவையாளர் உற்பட 146பேர் கலந்து கொண்டு இத்திட்டச் செயற்பாடு பற்றிய…
மேலும் படிக்க

விவசாய வருமான மேம்பாடு மற்றும் விவசாயிகளின் திறன்களுக்கான பயிற்சி

விவசாய சங்கங்களை வலுப்படுத்தி, விவசாயிகளின் அறிவு, திறன் மற்றும் தொழில் நுட்பத்தினை விருத்தி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து பொருளாதார மேம்பாட்டை அடையும் பொருட்டு லுத்தரன் உலக நிவாரண (LWR) அமைப்பின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டம் அமைப்பினால் இத்திட்ட அமுல்படுத்தல் தொடர்பான மாவட்டமட்ட விரிவுரையாக்கக் கலந்துரையாடலானது 12.06.2011ம் திகதி அம்பாறை, மாவட்ட அரச அதிபர் காரியாலயத்தில், திரு.சுணில்கன்னங்கரா (GA) அவர்களின் தலைமையில் அமைப்பினால் நடாத்தப்பட்டது.…
மேலும் படிக்க

CA அமைப்பு ஆலையடிவேம்பில் 24 பேருக்கும் கல்முனையில் 42 பேருக்கும் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துள்ளது.

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 24 பேருக்கும், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 42 பேருக்கும் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டது
மேலும் படிக்க

CA அமைப்பு கல்முனையில் வீட்டுத்தோட்டம் மற்றும் மட்பாண்ட தொழில்துறைக்கு 400,000.00 ரூபாவை வழங்குகிறது.

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் கல்முனை பிரதேசத்தில் இருந்து வீட்டுத் தோட்டத்திற்காக 50 பயனாளிகளும், மட்பாண்ட கைத்தொழிலுக்காக 15 பயனாளிகளும் தொழிலுக்கான உதவித் தொகையாக 400,000.00 ரூபாய் நிதியானது திட்ட உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் இப்பிரதேச செயலாளர் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

Oxfam ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சாலைகளை சுத்தம் செய்வதில் உதவுகிறது

வெள்ள அனர்த்தகால திண்மக்கழிவகற்றல் செயல் திட்டத்தின் கீழ் Oxfam அமைப்பின் நிதி உதவியுடன் 30,600.00 ரூபாய் செலவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோளாவில் – 01,02,03, நாவற்காடு, ஆலையடிவேம்பு, சின்னக்குளம், பெரியகுளம், வாச்சிக்குடா, இத்தியடி, தீவுக்காலை, பனங்காடு ஆகிய பிரிவுகளில் வீதிகள் தோறும் தேங்கியிருந்த திண்மக்கழிவுகளானது ஆலையடிவேம்பு பிரதேச சபையினூடாக அகற்றி சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.
மேலும் படிக்க

திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் உள்ள கிணறுகளை சுத்தம் செய்தல் மற்றும் குளோரினேஷன் செய்தல்.

திருக்கோவில், பொத்துவில் ஆகிய இரு பிரதேசங்களிலும் வெள்ளத்தினால் பாதிப்புக்குட்பட்ட 496 கிணறுகள் துப்பரவு செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், 3052 கிணறுகளுக்கு குளோரின் இடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

Oxfam 650 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களையும், 2419 ஹெல்த் பேக்கேஜ்களையும், 1037 வாட்டர் ஃபில்டர்களையும் ஆதரிக்கிறது.

வெள்ள அனர்த்த அவசரகால செயற்திட்டத்தின் கீழ் Oxfam அமைப்பின் நிதி உதவியுடன் ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 650 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களும், 2419 குடும்பங்களுக்கு உடல் சுகாதார மேம்பாட்டிற்கான பொதிகளும், 1037 குடும்பங்களுக்கு தண்ணீர் வடிகட்டி பாத்திரமும் இப்பிரதேச செயலகங்களின் ஊடாக கிராம சேவையாளர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

ZOA அமைப்பு திருக்கோவில் பகுதியில் உணவு அல்லாத பொருட்களைக் கொண்ட 1050 குடும்பங்களுக்கு ஆதரவளிக்கிறது

வெள்ள அனர்த்த அவசரகால செயல்திட்ட செயற்பாட்டின் கீழ் ZOA அமைப்பின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 1050 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களும் (Non food relief items), இப்பிரதேசத்தில் தெரிவு செய்யப் பட்ட 10 பாடசாலைகளுக்கு பாடசாலையை சுத்தம் செய்வதற்கான பொருட்களும் (School Cleaning tools) வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க