சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

தம்பட்டையில் மறு ஒருங்கிணைப்பு மற்றும் அனுபவப் பரிமாற்றம்.

இளைஞர்களின் நிலைமாற்றல் செயற்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்ட இளைஞர், யுவதிகள் அனைவரினது மீள் ஒருங்கிணைப்பு நிகழ்வானது அவர்களின் கருத்துப்பரிமாறல்கள், அனுபவப் பகிர்வுகளுடன் 2011/06/05,06ம் திகதி தம்பட்டை சுவாட் பயிற்சி நிலையத்தில் நடாத்தப்பட்டது. இன் நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக இளைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டதுடன், இதில் WUSC, UNICEF, ILO and Save the children பிரதிநிதிகளும், அரச சார்பற்ற ஏனைய அமைப்புக்களின் பிரதிநிதிகளும், இப்பயிற்சியினை நடாத்திய வளவாளர்களும் கலந்து இந்நிகழ்வினை சிறப்பித்துள்ளனர்.
மேலும் படிக்க

யுத்தம் மற்றும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன் மற்றும் அபிவிருத்திப் பட்டறைகள்.

அம்பாறை மாவட்டத்தில் யுத்தசூழல், அனர்த்தங்களின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உடல், உள ரீதியாக பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளை இலக்காகக் கொண்டு;, இளையோர்களுக்கு வாழ்க்கை தொடர்பான உள்ளுணர்வினை ஏற்படுத்தி, சமூகத்துடன் மீள இணைவதற்கும், கல்வி, பொருளாதாரத்தில் மேம்பாட்டை அடையும் பொருட்டும், தொழில் திறனை விருத்தி செய்து வாழ்க்கைத் தெரிவுகளை திட்டமிட்டு செயற்படுத்தக்கூடிய வகையில் இளைஞர்களிடையே நிலைமாற்றத்தினை ஏற்படுத்தும் பொருட்டு WUSC and UNICEF அமைப்புக்களின் நிதி உதவியுடன் இளைஞர்களின் நிலைமாற்றல் செயற்திட்டத்தின்…
மேலும் படிக்க

24 மையங்களில் குழந்தைகள் நல தகவல் மையங்களை நிறுவுகிறது

சுனாமியால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் வாழும் 3291 சிறுவர்களை இலக்குக் குழுவாகக் கொண்டு 24 நலன்புரி நிலையங்களில் Unicef நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிறுவர் நற்புறவாடல் தகவல் நிலையம் அமைக்கப்பட்டு சிறுவர்களது வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் நூலகம் அமைக்கப்பட்டதோடு இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க