சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

Funding Partners Tamil

24 மையங்களில் குழந்தைகள் நல தகவல் மையங்களை நிறுவுகிறது

சுனாமியால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் வாழும் 3291 சிறுவர்களை இலக்குக் குழுவாகக் கொண்டு 24 நலன்புரி நிலையங்களில் Unicef நிறுவனத்தின் நிதியுதவியுடன் சிறுவர் நற்புறவாடல் தகவல் நிலையம் அமைக்கப்பட்டு சிறுவர்களது வாசிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் நூலகம் அமைக்கப்பட்டதோடு இசைக்கருவிகள், விளையாட்டு உபகரணங்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க

72 தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குதல்

சிறுவர் உரிமைச் செயற்றிட்டத்தின் கீழ் சவளக்கடைக் கிராமத்திலுள்ள விநாயகர் பாடசாலையில் வசதி குறைந்த மாணவர்கள் 72 பேருக்கு Fit / CIDA நிறுவன நிதி உதவியுடன் சப்பாத்துக்கள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

சுனாமி மற்றும் போர் தாக்கத்திற்கு பிறகு வாழ்வாதாரத்தை உயர்த்துதல்

2006ம் ஆண்டு காரைதீவு, சம்மாந்துறைப் பிரதேசங்களில் சுனாமி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட மக்களின் வாழ்கைத்தரத்தினை மேம்படுத்தும் பொருட்டு 345 பேருக்கு தொழில் மேம்பாட்டுக்கான தொழில் உபகரணங்கள் Goal நிறுவன நிதி உதவியுடன் SWOAD அமைப்பினால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் படிக்க

Fit / CIDA ஆதரவுடன் SWOAD அமைப்பினால் சர்வதேச குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

சர்வதேச சிறுவர் தினமானது 2006.10.08ம் திகதி ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் Fit / CIDA நிறுவனத்தின் நிதி உதவியுடன் சுவாட் அமைப்பினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் சிறுவர் உரிமைச் செயற்றிட்டத்தில் உள்ளடங்கும் 08 கிராமங்களைச் சேர்ந்த 480 சிறுவர்களும், SWOAD அமைப்பின் இணைப்பாளர், பணியாளர்களும் அரச, அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் படிக்க

விரிவான தொழிற்பயிற்சி முயற்சிகள்: WUSC மற்றும் ILO ஆதரவுடன் எதிர்காலத்தை உருவாக்குதல்

தொழில் பயிற்சி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் WUSC அமைப்பின் நிதி உதவியுடன் பயிற்சிக்கான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிள்; திருத்தும் பயிற்சி, மின்னிணைப்பு, தச்சுப் பயிற்சி, ஆகிய பயிற்சி நெறிகளும், ILO அமைப்பின் நிதி உதவியுடன் சாரதி பயிற்சி நெறிகளும் நடாத்தப்பட்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கான நிவார உதவித்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

முதியோர்களுக்கு தொழில் மேம்பாட்டுகான கடனுதவிகளும், வைத்திய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன

ஒதுக்கப்பட்ட முதியோரின் வாழ்க்கையில் புத்தொழியூட்டும் நோக்கில் Helpage நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிறுகைத்தொழில்களை மேற்கொள்ளும் முதியோர்களுக்கு தொழில் மேம்பாட்டுகான கடனுதவிகளும், வைத்திய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.  
மேலும் படிக்க

சிறுவர்களுக்கு பாடசாலை சீருடைத்துணி, கற்கை உபகரணங்களடங்கிய பொதிகள் 600 வழங்கப்பட்டது.

சிவசரிட்டி (Sivacharity) நிறுவனத்தின் 8 இலட்சம் ரூபா செலவில் 5 முன்பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர் பாதுகாப்பு இலங்கை அமைப்பின் ; (SCiSL) 70,000.00 ரூபா செலவில் 3 தற்காலிக பாலர் பாடசாலைகள் திருக்கோவில், காரைதீவுப் பிரதேசங்களிலும், GVCஅமைப்பினால் கல்முனைப் பிரதேசத்தில் 2 பாலர் பாடசாலைகளும், உலக கனேடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனத்தின் 275,000.00 ரூபா செலவில் 8 பாலர் பாடசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. CIDA – Fit நிறுவனம் நலன்புரி நிலையங்களிலுள்ள…
மேலும் படிக்க