சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

Oxfam ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சாலைகளை சுத்தம் செய்வதில் உதவுகிறது

வெள்ள அனர்த்தகால திண்மக்கழிவகற்றல் செயல் திட்டத்தின் கீழ் Oxfam அமைப்பின் நிதி உதவியுடன் 30,600.00 ரூபாய் செலவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோளாவில் – 01,02,03, நாவற்காடு, ஆலையடிவேம்பு, சின்னக்குளம், பெரியகுளம், வாச்சிக்குடா, இத்தியடி, தீவுக்காலை, பனங்காடு ஆகிய பிரிவுகளில் வீதிகள் தோறும் தேங்கியிருந்த திண்மக்கழிவுகளானது ஆலையடிவேம்பு பிரதேச சபையினூடாக அகற்றி சுத்தம் செய்து கொடுக்கப்பட்டது.
மேலும் படிக்க

Oxfam 650 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களையும், 2419 ஹெல்த் பேக்கேஜ்களையும், 1037 வாட்டர் ஃபில்டர்களையும் ஆதரிக்கிறது.

வெள்ள அனர்த்த அவசரகால செயற்திட்டத்தின் கீழ் Oxfam அமைப்பின் நிதி உதவியுடன் ஆலையடிவேம்பு, திருக்கோவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 650 குடும்பங்களுக்கு உணவு அல்லாத பொருட்களும், 2419 குடும்பங்களுக்கு உடல் சுகாதார மேம்பாட்டிற்கான பொதிகளும், 1037 குடும்பங்களுக்கு தண்ணீர் வடிகட்டி பாத்திரமும் இப்பிரதேச செயலகங்களின் ஊடாக கிராம சேவையாளர் தலைமையில் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

சாகம கிராமத்தில் 200 புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து சாகாம கிராமத்தில் குடியேறிய மக்களுக்கும், அக் கிராமத்தில் அடிப்படை வசதி குறைந்த மக்களுமாக 200 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு OXFAM அமைப்பின் அனுசரணையில் 358,600.00 ரூபா செலவில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

Oxfam நிதியுதவியுடன் கூடிய அரிசி சேகரிப்பு நிலையம் தம்பத்தை கிராமத்தில் திறந்து வைக்கப்பட்டது

Oxfam நிறுவனத்தின் நிதி உதவியுடன் தம்பட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டஇந் நெற்களஞ்சிய சாலையானது 2009.01.20ம் திகதி அம்பாறை மாவட்ட அரச அதிபர் திரு சுனில் கன்னங்கரா அவர்கள் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
மேலும் படிக்க