சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

கல்முனை மற்றும் திருக்கோவில் பகுதிகளில் சுயஉதவி குழு பொருட்கள் விற்பனை நிலையம் திறப்பு.

உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும்முகமாக Diakonia திட்டத்தின் கீழ் சுய சார்புக் குழுக்களுடைய உற்பத்திப்பொருட்களின் விற்பனை நிலையமானது கல்முனை, திருக்கோவில் பிரதேசங்களில் 15,16.02.2012ம் திகதி காலை 11.00 மணிக்கு பிரதேச நிர்வாக உத்தியோகத்தர்களின் தலைமையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

15 பாலர் பள்ளிகளில் 500 பாலர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குகிறது

அமைப்பின் செயற்பாட்டுப் பிரதேசங்களான பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் சத்துணவு வழங்குவதற்காக 15 முன் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுDCA, Diakonia நிறுவனத்தின் 1,000,000/= நிதியுதவியுடன் அப் பாலர் பாடசாலைகளில் பயிலும் 500 சிறுவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகள்

கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2008ம் ஆண்டில் கா.பொ.த சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கான மீட்டல் வகுப்பானது DCA, Diakonia நிறுவனத்தின் நிதியுதவியுடன் 493,000.00 ரூபாய் செலவில் திருக்கோவில், நாவிதன்வெளி, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் நடாத்தப்பட்டது. இதில் 611 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

சுனாமிக்குப் பிந்தைய வருவாய் மீட்புக்கு உதவுவதற்காக 117 குடும்பங்களுக்கு வணிக உபகரணங்களை வழங்கினோம்.

2007ம் ஆண்டு Providing Cash for Grant செயல்திட்டத்திற்கூடாக சுனாமியினால் பாதிக்கப்பட்டு தொழில்களை இழந்தவர்களின் வருமானத்தை மேம்படுத்தும் முகமாக சுய தொழில்களை மேற்கொள்ளும் பொருட்டு பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை போன்ற பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 117 குடும்பங்களுக்கு Diakonia நிறுவனத்தின் உதவியுடன் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க