சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

சுகாதாரம் மற்றும் நீர் திட்டங்கள்: 2008 இல் அணுகல் மற்றும் வசதிகளை மேம்படுத்துதல்.

2008ம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட சமூக புனர்வாழ்வு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் DCA/FCA நிறுவனத்தின் 2,840,000.00 ரூபாய் நிதியுதவியுடன் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 20 மலகூடங்களுக்கும், 20 கிணறுகளும், Neccdep நிறுவனத்தின் 1,703,000.00 ரூபாய் செலவில் சின்னப்பனங்காடு, தம்பட்டை-01, தம்பிலுவில்-02, வினாயகபுரம்-02 ஆகிய கிராமங்களில் 4 பொதுக்கிணறுகளும், மலகூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதோடு. சங்கமங்கிராமத்தில் 573,500.00 ரூபாய் செலவில் மலசலகூடம் ஒன்றும் அதற்கான சுற்றுவேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சம்மாந்துறையில் 20 வீடுகளும் நாவிதன்வெளியில் 19 வீடுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக புனர்வாழ்வு அபிவிருத்தி செயற்திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட சமூக புனர்வாழ்வு அபிவிருத்தி செயல் திட்டத்தின் கீழ் CA நிறுவனத்தின் 19,600,000/= நிதியுதவியுடன் சம்மாந்துறை பிரதேசத்தில் 20 நிரந்தர வீட்டுகளும், நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 19 வீடுகளும் அமைக்கப்பட்டதோடு புனரமைப்பு வீட்டுத்திட்டத்திற்காக 85 பயனாளிகள் நாவிதன்வெளிப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு DCA / FCA நிறுவனங்களின் 25,625,000/= நிதி உதவியுடன் இவ்வீடுகள் புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
மேலும் படிக்க

15 பாலர் பள்ளிகளில் 500 பாலர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குகிறது

அமைப்பின் செயற்பாட்டுப் பிரதேசங்களான பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் சத்துணவு வழங்குவதற்காக 15 முன் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுDCA, Diakonia நிறுவனத்தின் 1,000,000/= நிதியுதவியுடன் அப் பாலர் பாடசாலைகளில் பயிலும் 500 சிறுவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க