சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

CA அமைப்பு ஆலையடிவேம்பில் 24 பேருக்கும் கல்முனையில் 42 பேருக்கும் தற்காலிக தங்குமிடங்களை அமைத்துள்ளது.

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 24 பேருக்கும், கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 42 பேருக்கும் தற்காலிக கொட்டில் அமைத்துக் கொடுக்கப்பட்டது
மேலும் படிக்க

CA அமைப்பு கல்முனையில் வீட்டுத்தோட்டம் மற்றும் மட்பாண்ட தொழில்துறைக்கு 400,000.00 ரூபாவை வழங்குகிறது.

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் CA அமைப்பின் அனுசரணையுடன் கல்முனை பிரதேசத்தில் இருந்து வீட்டுத் தோட்டத்திற்காக 50 பயனாளிகளும், மட்பாண்ட கைத்தொழிலுக்காக 15 பயனாளிகளும் தொழிலுக்கான உதவித் தொகையாக 400,000.00 ரூபாய் நிதியானது திட்ட உத்தியோகத்தர் அவர்களின் தலைமையில் இப்பிரதேச செயலாளர் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

நான்கு பிராந்தியங்களில் 1500 பயனாளிகளுக்கு 4500 பழ மரக்கன்றுகள்

CA , NCA ஆகிய நிறுவனங்களின் 420,000.00 ரூபாய் நிதி உதவியுடன் பொத்துவில், திருக்கோவில், சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய நான்கு pரதேசங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 27 கிராமக்கிளைகளின் 1500 பயனாளிகளுக்கு மா, பலா, தென்னை, கொய்யா ஆகிய மரக்கன்றுகள் உள்ளடங்களாக ஒரு பயனாளிக்கு 3 கன்றுகள் வீதம் 4500 பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளியில் 300 விவசாயிகளுக்கான பயிற்சிகள் மற்றும் உபகரண உதவிகள்.

CA அமைப்பின் நிதி உதவியுடன் வீட்டுத்தோட்டம், நெற் செய்கையில் ஈடுபடும் 300 விவசாயிகளுக்கு இயற்கைமுறை விவசாயம் தொடர்பாக 95,000.00 ரூபாய் செலவில் 10 பயிற்சிகள் நடாத்தப்பட்டுள்ளதுடன், கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 4 பயனாளிகளுக்கு 160,000.00 ரூபாய் செலவில் தொழிநுட்ப உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க

கல்முனையில் விதை நெல் மற்றும் நெசவுத் தொழிலுக்கு நிதி உதவி

CA அமைப்பின் நிதி உதவியுடன் சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய இரு பிரதேசங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 4 விவசாயிகளுக்கு விதை நெல் உற்பத்திக்காக ஒருவருக்கு 30,000.00 வீதம் 4 பயனாளிகளுக்கும் 120,000.00 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதுடன், கல்முனை பிரதேச பாண்டிருப்பு கிளையில் 6 பேரைக் கொண்ட சுய உதவிக்குழு ஒன்றிற்கு நெசவுத் தொழில் செய்வதற்காக ரூபாய் 343,000.00 நிதி உதவியும் வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

3000 பழ மரக்கன்றுகளை வழங்க CA அமைப்பு நிதி விநியோகம்.

2008ம் ஆண்டு CA நிறுவனத்தின் 600,000.00 ரூபாய் நிதி உதவியுடன் 6 செயற்பாட்டுப் பிரதேசத்திலிருந்தும் 10 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் 100 பயனாளிகள் வீதம் 10 கிராமங்களில் இருந்தும் 1000 பயனாளிகளுக்கு கொய்யா, பலா, மா ஆகிய பழமரக்கன்றுகள் 3000 கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க