சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

தச்சு மற்றும் உழவு இயந்திரம் பழுதுபார்க்கும் பயிற்சி மையங்களை உருவாக்குதல், 6 பிரிவுகளில் 174 இளைஞர்களுக்கு பலதரப்பட்ட திறன் மேம்பாடு படிப்புகளுக்கு பயனளித்தல்

உலக கனேடிய பல்கலைக்கழக நிறுவனத்தின் நிதி உதவியுடன் 50 இலட்சம் ரூபாய் செலவில் பொத்துவில் பிரதேசத்தில் தச்சுத்தொழிற்பயிற்சி நிலையமும், நாவிதன்வெளி பிரதேசத்தில் உழவு இயந்திரம் திருத்தும் பயிற்சி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளதோடு 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 174 இளைஞர், யுவதிகளை உள்ளிணைத்து 4இ722இ100.00 ரூபாய் ODW அமைப்பின் நிதி உதவியுடன்; உழவு இயந்திரம் திருத்துதல், வீட்டு மின்னிணைப்பு, குளிரூட்டல்; பயிற்சி, கணினிப் பயிற்சி, வீட்டுமின் உபகரணம் திருத்துனர் பயிற்சி, தையல்;…
மேலும் படிக்க

தச்சு மற்றும் மின்சாரத் திறன்களுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களை நிறுவுகிறது.

தொழில் பயிற்சி வழங்கல் செயல் திட்டத்தின் கீழ் திருக்கோவில், கல்முனை ஆகிய பிரதேச செயலக பிரிவில் World University of Canada (WUSC) நிறுவனங்களின் நிதி உதவியுடன், NVQ தரத்திலான தொழில் பயிற்சி கட்டிடங்கள் அமைக்கப்பட்டு Carpentry Furniture, Electrician போன்ற தொழில் பயிற்சிகள் நடாத்தப்பட்டதோடு, பயிற்சிகளை முடித்துக்கொண்ட பயிலுனர்களுக்கான NVQ தரத்திலான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

335 உயர்நிலை மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்துகிறது

கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2006ம் ஆண்டில் க.பொ.த உயர் தரத்தில் கல்வி பயிலும் திருக்கோவில், நாவிதன்வெளி பிரதேசத்திற்குட்பட்ட 335 மாணவர்களுக்கு மீட்டல் வகுப்புகள் சுவாட் அமைப்பினால் நடாத்தப்பட்டது.
மேலும் படிக்க

விரிவான தொழிற்பயிற்சி முயற்சிகள்: WUSC மற்றும் ILO ஆதரவுடன் எதிர்காலத்தை உருவாக்குதல்

தொழில் பயிற்சி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் WUSC அமைப்பின் நிதி உதவியுடன் பயிற்சிக்கான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிள்; திருத்தும் பயிற்சி, மின்னிணைப்பு, தச்சுப் பயிற்சி, ஆகிய பயிற்சி நெறிகளும், ILO அமைப்பின் நிதி உதவியுடன் சாரதி பயிற்சி நெறிகளும் நடாத்தப்பட்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கான நிவார உதவித்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

சிறுவர்களுக்கு பாடசாலை சீருடைத்துணி, கற்கை உபகரணங்களடங்கிய பொதிகள் 600 வழங்கப்பட்டது.

சிவசரிட்டி (Sivacharity) நிறுவனத்தின் 8 இலட்சம் ரூபா செலவில் 5 முன்பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர் பாதுகாப்பு இலங்கை அமைப்பின் ; (SCiSL) 70,000.00 ரூபா செலவில் 3 தற்காலிக பாலர் பாடசாலைகள் திருக்கோவில், காரைதீவுப் பிரதேசங்களிலும், GVCஅமைப்பினால் கல்முனைப் பிரதேசத்தில் 2 பாலர் பாடசாலைகளும், உலக கனேடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனத்தின் 275,000.00 ரூபா செலவில் 8 பாலர் பாடசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. CIDA – Fit நிறுவனம் நலன்புரி நிலையங்களிலுள்ள…
மேலும் படிக்க