சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர் தினம் 2023

18.12.2023 ம் திகதி VOM (Voice of Migration) ஏற்பாட்டில் கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் புலம்பெயர் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் விசேட அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ Manusha Nanayakkara மற்றும் SDC, Helvetas, Solitaries போன்ற நிதி நிறுவன பிரதிநிதிகளும், ஏனைய சிவில் அமைப்புக்களும் பங்குபற்றியிருந்தனர். இதில் சுவாட் அமைப்பின் சார்பில் திரு.ச. ஆனந்தராசா மற்றும் சம்மாந்துறை, இறக்காமம் புலம்பெயர் சங்கத்தலைவிகளும் பங்குபற்றியிருந்தனர்.
மேலும் படிக்க

அனுபவங்கங்களை கற்றுக் கொள்ளும் முகமாக நுவரெலியா மாவட்டத்தில் பணிபுரிகின்ற PREDO நிறுவனத்தினர் கள விஐயம்

SWOAD நிறுவனத்தின் கீழ் இயங்கிவருகின்ற புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் அனுபவங்களை கற்றுக் கொள்ளும் முகமாக ஹற்றன் நுவரேலியா மாவட்டத்தில் பணிபுரிகின்ற PREDO நிறுவனத்தின் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கடந்த 02.12.2023ம் திகதி சம்மாந்துறைப்பிரதேசத்தில் கள விஐயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சுவாட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் குறிப்பாக சுவாட் நிறுவனத்தின் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் செயற்பாடுகள் ,…
மேலும் படிக்க

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் 3 மீளாய்வுக் கலந்துரையாடல்கள்

இத்திட்டத்தின் ஊடாக திட்ட செயற்பாட்டு பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர் நலன்புரிச்சங்கங்களின் நோக்கம் குறித்தும், இச்சங்கத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை தெளிவுபடுத்தி எதிர்வரும் காலங்களில் இச் சங்கங ;களுடன் இணைந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்எவ்வாறு செயலாற்றுவது சேவையினை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்துவது, இதிலுள்ள சாதக,பாதகங்கள் குறித்தும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் 3 மீளாய்வுக் கலந்துரையாடல்கள் DOFE Coordinator A.M.Farzan…
மேலும் படிக்க

பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு தகவல்கள் குறித்த விழிப்புணர்வு

பாதுகாப்பான தொழிலாளர் புலம்பெயர்வு தகவல்கள் குறித்தவிழிப்புணர்வை கிராம மக்களுக்கு வழங்கும் நோக்கில்இத்திட்டச் செயற்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 105 தொண்டர்களுக்கு அவர்களுக்குத் தேவையான 4 நாள் கொண்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சிகளில் ஈடுபட சங்க நிர்வாகிகளுக்கான பயிற்சி

புலம்பெயர் தொழிலாளர் குடும்பங்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு இச்சக்கத்தின் ஊடாக தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பாதுகாப்பான முறையில் வெளிநாடு செல்லல் தொடர்பான தகவல்களை வழங்குதல், பாதிக்கப்பட்டோருக்கான சட்ட உதவியளித்தல், உளவள ஆலோசனை வழங்கல், மற்றும் அனுப்பப்படும் நிதியை முகாமைத்துவம் செய்வதற்கு குடும்பத்துடன் மீள இணைந்துகொள்வதற ;குமான வழிகாட்டுதல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்வதற்கும் 30 சங்கங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 350 பேரை உள்ளினைத்து 16 பயிற்சிகள் நடாத்தப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

புலம்பெயர்ந்த தொழிலாளர் நல சங்கங்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி

புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கங்கள் கொள்தகுதிறனை விருத்திசெய்து சக்திப்படுத்தி வலுவூட்டுவதன் ஊடாக வினைத்திறனான சேவைகளை புலம்பெயர் தாழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ளுனுஊ நிறுவனத்தின் ஆலோசகர் திருமதி.மொனிக்கா அவர்களைக்கொண்டு இச்சங்க தலைவர்கள், நிர்வாகிகள், பணியாளர்களை உள்ளிணைத்த வகையில் மாவட்ட அளவில் 3 பயிற்சிகள் நடாத்தப்பட்டுள்ளன. இப்பயிற்சியில் 66பேர் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் படிக்க

சர்வதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தின சிறப்பு நிகழ்வுகள் – 20.12.2016

சர்வதேச புலம்பெயர் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலகத்துடன் இணைந்து SWOAD அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறக்காமம் பிரதேச செயலாளர் ஜனாப் எம்.என். நசீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுயேட்சை கள இணைப்பாளர் ஐ.முஹம்மது இல்மி, ஜே.ஜெகனேஸ், களப்பணியாளர் நிலுஜா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர், புலனாய்வு ஆணையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்
மேலும் படிக்க

கிராமங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு தெரு நாடகம்.

EU-ACAP திட்டத்தின் கீழ் தாண்டியடி, சிறிவல்லிபுரம், விநாயகபுரம், குடிநிலம் ஆகிய கிராமங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வூட்டும் பொருட்டு வீதி நாடகம் நடாத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சாகம கிராமத்தில் 200 புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து சாகாம கிராமத்தில் குடியேறிய மக்களுக்கும், அக் கிராமத்தில் அடிப்படை வசதி குறைந்த மக்களுமாக 200 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு OXFAM அமைப்பின் அனுசரணையில் 358,600.00 ரூபா செலவில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க