சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

சுற்றுச்சூழல் அபிவிருத்தி

நான்கு பிராந்தியங்களில் 1500 பயனாளிகளுக்கு 4500 பழ மரக்கன்றுகள்

CA , NCA ஆகிய நிறுவனங்களின் 420,000.00 ரூபாய் நிதி உதவியுடன் பொத்துவில், திருக்கோவில், சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய நான்கு pரதேசங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 27 கிராமக்கிளைகளின் 1500 பயனாளிகளுக்கு மா, பலா, தென்னை, கொய்யா ஆகிய மரக்கன்றுகள் உள்ளடங்களாக ஒரு பயனாளிக்கு 3 கன்றுகள் வீதம் 4500 பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

DA அமைப்பு பல்வேறு பகுதிகளில் 10 தண்ணீர் தொட்டிகளுக்கு நிதியளிக்கிறது

DA நிறுவனத்தின் 5,30,000.00 ரூபாய் நிதியுதவியுடன் பொத்துவில் பிரதேசத்தில் 2 நீர் தாங்கிகளும், திருக்கோவில் பிரதேசத்தில் 3 நீர்தாங்கிகளும், நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 3 நீர்தாங்கிகளும், சம்மாந்துறை பிரதேச வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் 1, கல்முனை பிரதேச துரவந்தியமேடு கிராமத்தில் 1 தாங்கியுமாக 10 நீர்த்தாங்கிகள் அமைத்து வழங்கப்பட்டன.
மேலும் படிக்க

2006ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னரான புனரமைப்புப் பணிகள்

2006ம் ஆண்டு சுனாமிக்குப் பின்னான மீள்புனரமைப்பின் நிரந்தர வீடமைக்கும் திட்டத்தின் ஊடாக கல்முனை, காரைதீவுப் பிரதேசங்களில் தலா 6 இலட்சம் ரூபா பெறுமதியான 50 நிரந்தர வீடுகள் Cristain Aid நிறுவன நிதி உதவியுடன் நிர்மானிக்கப்பட்டு கையளிக்கப்பட்டதுடன், Oxfam , ZOA நிறுவனங்களின் நிதி உதவியுடன் சம்மாந்துறை, நாவிதன்வெளி பிரதேசங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 27 பயனாளிகளுக்கு தற்காலிக வீடுகள் அமைத்து வழங்கப்பட்டது.
மேலும் படிக்க