சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

Month: தை 2024

முகாமைத்துவசபைக் கலந்துரையாடல்.- 31.01.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகளில் துறைசார் பிரிவு ரீதியாக மேம்படுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்த கலந்துரையாடலானது 31.01.2024ம் திகதி சுவாட் தலைமையலுவலகத்தில் ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது Mind map ஊடாக ஒவ்வொருவரும் தமது பிரிவு ரீதியாக என்னென்ன விடயங்களை கவனத்தில் கொண்டு அவற்றை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளனர் என்பது குறித்து சமர்பணம் ஒன்றினூடாக விளக்கமளித்தனர்.
மேலும் படிக்க

ஆலையடிவேம்பு விவசாயிகளுடனான கலந்துரையாடல்

SWOAD நிறுவனமானது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 21.01.2024ம் திகதி சுவாட் நிறுவனத்தின் அக்கரைப்பற்றில் உள்ள தலைமையலுவலகத்தில் அந்நிறுவனத்தின் ஸ்தாபகரும். இணைப்பாளருமான திரு.எஸ்.செந்துராசா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது இதன்படி இக்கூட்டத்தில் தற்போது விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. மேலும் இக்கலந்துரையாடலுக்கு விவசாய அமைப்புக்களின் தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் சுவாட்…
மேலும் படிக்க

சேமிப்புக் கடன் திட்டத்திற்கான New System தொடர்பான கலந்துரையாடல்

சேமிப்புக் கடன் திட்டத்திற்கான New System தொடர்பான கலந்துரையாடலானது 18.01.2024ம் திகதி சுவாட் தலைமைக்காரியாலயத்தில் தலைவி.திருமதி கஜேந்தினி சுவேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் SYSCGAA – Founder Mr.K.Barathan மற்றும் சுவாட் அமைப்பின் முகாமைத்துவசபை உறுப்பினர்களும், சேமிப்புக்கடன் திட்ட பணியாளர்களும், Teams செயலினூடாக பிரதேச முகாமையாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாகசபையின் கலந்துரையாடல் கூட்டம்

SWOAD நிறுவனம் மற்றும் ASI நிறுவனமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்ற அம்பாறை மாவட்ட பேண்தகு உட்கட்டுமானத்திற்கான மக்கள் மன்றத்தின் 1வது நிருவாக கூட்டமானது கடந்த 02.01.2024ம் திகதி சுவாட் நிறுவனத்தின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.எஸ்.செந்துராசா அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று சுவாட் தலைமை அலுவலகத்தில் நடாத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் குறிப்பாக மக்கள் மன்றத்தில் எதிர்கால செயற்பாடுகள், உறுப்பினர்கள் கடமைகள், பொறுப்புக்கள் அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கட்டப்பட்ட உட்கட்டுமானங்களின் பயன்பாடுகள்…
மேலும் படிக்க

2024ம் ஆண்டிற்கான புதுவருட நிகழ்வு

2024ம் ஆண்டிற்கான புதுவருட நிகழ்வானது ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் ஆலையடிவேம்பு ஸ்ரீ சத்தியசாயி சேவா நிலைய பிரார்த்தனைக்கூடான இறை ஆசியுடனும் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2024ம் ஆண்டிற்கான செயற்பாடுகள் குறித்தும், இதில் சகல மட்ட பணியாளர்களின் ஒத்துளைப்புக்கள், பங்களிப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் சகல பணியாளர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க