உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும்முகமாக Diakonia திட்டத்தின் கீழ் சுய சார்புக் குழுக்களுடைய உற்பத்திப்பொருட்களின் விற்பனை நிலையமானது கல்முனை, திருக்கோவில் பிரதேசங்களில் 15,16.02.2012ம் திகதி காலை 11.00 மணிக்கு பிரதேச நிர்வாக உத்தியோகத்தர்களின் தலைமையில் வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கஞ்சிகுடியாறு, தாண்டியடி, வினாயகபுரம் -1,2,3,4, தங்கவேலாயுதபுரம், காஞ்சிடங்குடா, சிறிவள்ளிபுரம், குடிநிலம், சாகாமம் ஆகிய 11 கிராம சேவர் பிரிவுகளில் இருந்தும் தேசிய அடையாள அட்டை, பிறப்பு பதிவு, மரண பதிவு போன்ற ஆவணங்கள் இல்லாதோர் 560பேர் இனங்காணப்பட்டு NRC ஊடாக அவர்களுக்கான ஆவணங்கள் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.
EU-ACAP திட்டத்தின் கீழ் தாண்டியடி, சிறிவல்லிபுரம், விநாயகபுரம், குடிநிலம் ஆகிய கிராமங்களில் பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வூட்டும் பொருட்டு வீதி நாடகம் நடாத்தப்பட்டுள்ளது.
EU-ACAP திட்டத்தின் கீழ் 17.10.2012ம் திகதி திருக்கோவில் பொலிஸ் Women desk அடிக்கல் நாட்டல் நிகழ்வும், வினாயகபுரம் கல்வெட்டு திறப்புவிழாவும் நடைபெற்றது.