சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

Month: கார்த்திகை 2010

சுகாதாரம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளுடன் நீர் மற்றும் சுகாதார மேம்பாட்டு சவால்கள் பற்றிய காலாண்டு கூட்டம்

பொது சுகாதார முன்னேற்றங்கள் குறித்து சுகாதார திணைக்கள அதிகாரி திருமதி. ளு.ராஜேந்திரா அவர்களைக் கொண்டு 03 Quarterly meeting நடாத்தப்பட்டுள்ளது. இதில் சுகாதார திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்வழங்கல் வடிகால் திணைக்கள அதிகாரிகள், அரச சார்பற்ற அமைப்புக்கள் உள்ளடங்களாக 75 பேர் கலந்து கொண்டு, நீர், பொது சுகாதார அபிவிருத்தியில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் திணைக்கள ரீதியாக ஆராயப்பட்டது.
மேலும் படிக்க

கிழக்குப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் 11 பல்கலைக்கழக மாணவர்களுக்கு 93,250.00 ரூபாவை வழங்கினோம்.

கல்வியினை மேன்படுத்தும் நோக்கில் கல்வி உபகார நிதி வழங்கல் செயல் திட்டத்தின்கீழ் பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு ஆகிய 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்தும் தெரிவு நிபந்தனையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக, கா.பொ.த. உயர்தர மாணவர்கள் 11 பேருக்கு கல்வி உபகார நிதியாக இவ்வருடம் 93,250.00 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

70 மாணவர்கள் NVQ சான்றிதழ்கள் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான உபகரணங்களைப் பெறுகின்றனர்

தொழிற்பயிற்சித் திட்டத்தின் கீழ் பயிற்சிநெறியை முடித்துக்கொண்ட 70 மாணவர்களுக்கு NVQ சான்றிதழும், தொழிலை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக 15,000.00 ரூபாய் பெறுமதியான தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

சாகம கிராமத்தில் 200 புலம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி

வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து சாகாம கிராமத்தில் குடியேறிய மக்களுக்கும், அக் கிராமத்தில் அடிப்படை வசதி குறைந்த மக்களுமாக 200 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு OXFAM அமைப்பின் அனுசரணையில் 358,600.00 ரூபா செலவில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க

திருக்கோவில் மற்றும் விநாயகபுரத்தில் உள்ள விவசாயிகளுக்கு களப் பதிவு பணிகளுக்கு உதவி

வாழ்வாதாரத் திட்டத ;தின் கீழ் திருக்கோவில், பொத்துவில் பிரதேச விவசாயிகள் 116 பேருக்கு பிரதேச செயலாளர் ஊடாக வயல், மேட்டுநிலங்களை பதிவு செய்வதற்குத் தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டதுடன், SOND நிறுவனத்தின் ஊடாக வினாயகபுரம் 01,02,03,04 கிளைகளிலுள்ள 100 விவசாயிகளுக்கு வீட்டுத்தோட்டத்திற்கான விதையினங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், ரொட்டை-ஹிஜ்ரா கிராமத்தின் 53 விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தின் மூலம் 53 மண்வெட்டிகளும், 40 விவசாயிகளுக்கு கமநல சேவை நிலையங்களினூடாக ஊடாக…
மேலும் படிக்க

வாழ்வாதார உதவித் திட்டத்துக்காக 1774 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது

2010ம் ஆண்டு வாழ்வாதார உதவித்திட்டத ;தின் கீழ் ஆறு பிரதேசத்திலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 1774 பயனாளிகளிக்கு ரூபா 64,986,000.00 தொகை நிதியானது தொழில்களை மேற்கொள்வதற்காக கடனாக வழங்கப்பட்டுள்ளது.  
மேலும் படிக்க