மூவின மக்களிடையே சமாதான நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் வகையில் நாவிதன்வெளிப் பிரதேச 4ம் கிராம வாணி மகா வித்தியாலயத்தில் 2009.12.26 திகதி மூவின மக்களையும் உள்ளிணைத்து கலாச்சார விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டது
கல்வி கற்றுவரும் சிறார ;களின் திறன், ஆற்றல்களை வெளிக்கொண்டு வரும் வகையில் கல்முனைப் பிரதேசத்தில் செயற்பட்டு வரும் விவேகானந்தா, கணேசா, கலைமகள் ஆகிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கிடையே இப் பிரதேச நிர்வாக உத்தியோகத்தர் தலைமையில் 2009.08.09ம் திகதி கல்முனை மணச்சேனை கிராம விவேகானந்தா பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு ஊக்குவிப்பு பரிசில்களும் வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரதம அதிதிகளாக கணேசா மகாவித்தியாலய அதிபர் திரு.P.ஜெகநாதன், மு.சந்திரலிங்கம் அவர்களும், விவேகானந்தா பாடசாலை ஆசிரியை…
CA , NCA ஆகிய நிறுவனங்களின் 420,000.00 ரூபாய் நிதி உதவியுடன் பொத்துவில், திருக்கோவில், சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய நான்கு pரதேசங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 27 கிராமக்கிளைகளின் 1500 பயனாளிகளுக்கு மா, பலா, தென்னை, கொய்யா ஆகிய மரக்கன்றுகள் உள்ளடங்களாக ஒரு பயனாளிக்கு 3 கன்றுகள் வீதம் 4500 பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
அனர்த்த அபாயத்தணிப்பு செயற்திட்டத்தின் கீழ் பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி அகிய 6 பிரதேசங்களில் இருந்தும் தெரிவு செய்யப்பட்ட 450 பயனாளிகளுக்கு 152,000.00 ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 450 அனகியடுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது.
CA அமைப்பின் நிதி உதவியுடன் வீட்டுத்தோட்டம், நெற் செய்கையில் ஈடுபடும் 300 விவசாயிகளுக்கு இயற்கைமுறை விவசாயம் தொடர்பாக 95,000.00 ரூபாய் செலவில் 10 பயிற்சிகள் நடாத்தப்பட்டுள்ளதுடன், கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 4 பயனாளிகளுக்கு 160,000.00 ரூபாய் செலவில் தொழிநுட்ப உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது
CA அமைப்பின் நிதி உதவியுடன் சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய இரு பிரதேசங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 4 விவசாயிகளுக்கு விதை நெல் உற்பத்திக்காக ஒருவருக்கு 30,000.00 வீதம் 4 பயனாளிகளுக்கும் 120,000.00 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதுடன், கல்முனை பிரதேச பாண்டிருப்பு கிளையில் 6 பேரைக் கொண்ட சுய உதவிக்குழு ஒன்றிற்கு நெசவுத் தொழில் செய்வதற்காக ரூபாய் 343,000.00 நிதி உதவியும் வழங்கப்பட்டது.
சர்வதேச மகளீர்தின நிகழ்வானது நாவிதன்வெளிப் பிரதேச ராணமடு மகாவித்தியாலயத்தில் 2009.03.29ம் திகதி நிர்வாகப்பணிப்பாளர் திரு.வ.பரமசிங்கம் அவர்களின் தலைமையில் நடாத ;தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரதேச தவிசாளர் திரு. T .கலையரசன் அவர்களும், 12ம் கிராம பாடசாலை அதிபர் திரு. A.M யுசிப் அவர்களும், RDS k..அமுர்தலிங்கம் அவர்களும், சமாதான நீதவான் யு.ஆறுமுகம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின்போது சமூகத்தில் முன்னோடிப் பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்
Oxfam நிறுவனத்தின் நிதி உதவியுடன் தம்பட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டஇந் நெற்களஞ்சிய சாலையானது 2009.01.20ம் திகதி அம்பாறை மாவட்ட அரச அதிபர் திரு சுனில் கன்னங்கரா அவர்கள் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.