சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

Year: 2008

3000 பழ மரக்கன்றுகளை வழங்க CA அமைப்பு நிதி விநியோகம்.

2008ம் ஆண்டு CA நிறுவனத்தின் 600,000.00 ரூபாய் நிதி உதவியுடன் 6 செயற்பாட்டுப் பிரதேசத்திலிருந்தும் 10 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு கிராமத்திலும் 100 பயனாளிகள் வீதம் 10 கிராமங்களில் இருந்தும் 1000 பயனாளிகளுக்கு கொய்யா, பலா, மா ஆகிய பழமரக்கன்றுகள் 3000 கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

பல கிராமங்களில் 1200 பெறுநர்களுக்கு சுகாதார உதவி வழங்கப்பட்டது

சுகாதார மேம்பாட்டின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக மீள்புனர்வாழ்வு அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை, நாவிதன்வெளி, கல்முனை ஆகிய பிரதேசங்களில் 1200 பேருக்கு 600,000.00 ரூபாய் செலவில் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

ஒருங்கிணைந்த திட்டம் விழிப்புணர்வு, திறன்கள் மற்றும் சமூக மேம்பாட்டை இயக்குகிறது.

ஒருங்கிணைக்கப்பட்ட சமூக மீள்புனர்வாழ்வு அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் 6 செயற்பாட்டுப் பிரதேசங்களிலுமுள்ள கிராமக் கிளைகளில் 5335 பயனாளிகளுக்கு சுகாதாரம், போசாக்கு, பெண்கள்உரிமை, பால்நிலை சமத்துவம், தலைமைத்துவம், சிறுவர் கல்வியின் முக்கியத்துவம், HIV/ AIDS கோழிவளர்ப்பு, கற்பிணித் தாய், பாலூட்டும் தாய், சிறுவர் போசாக்கு மேம்பாடு பற்றி கிராம மக்களுக்கான விழிப்புணர்வு, அனர்த்த அபாயக் குறைப்பு, கணக்கு வைப்பு முறைகள், இயற்கை முறையிலான விவசாயம், சமாதானத்தை கட்டியெழுப்புதல், சந்தைப்படுத்தல் போன்ற பயிற்சித்…
மேலும் படிக்க

DA அமைப்பு பல்வேறு பகுதிகளில் 10 தண்ணீர் தொட்டிகளுக்கு நிதியளிக்கிறது

DA நிறுவனத்தின் 5,30,000.00 ரூபாய் நிதியுதவியுடன் பொத்துவில் பிரதேசத்தில் 2 நீர் தாங்கிகளும், திருக்கோவில் பிரதேசத்தில் 3 நீர்தாங்கிகளும், நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 3 நீர்தாங்கிகளும், சம்மாந்துறை பிரதேச வளத்தாப்பிட்டிக் கிராமத்தில் 1, கல்முனை பிரதேச துரவந்தியமேடு கிராமத்தில் 1 தாங்கியுமாக 10 நீர்த்தாங்கிகள் அமைத்து வழங்கப்பட்டன.
மேலும் படிக்க

சுகாதாரம் மற்றும் நீர் திட்டங்கள்: 2008 இல் அணுகல் மற்றும் வசதிகளை மேம்படுத்துதல்.

2008ம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட சமூக புனர்வாழ்வு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் DCA/FCA நிறுவனத்தின் 2,840,000.00 ரூபாய் நிதியுதவியுடன் நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 20 மலகூடங்களுக்கும், 20 கிணறுகளும், Neccdep நிறுவனத்தின் 1,703,000.00 ரூபாய் செலவில் சின்னப்பனங்காடு, தம்பட்டை-01, தம்பிலுவில்-02, வினாயகபுரம்-02 ஆகிய கிராமங்களில் 4 பொதுக்கிணறுகளும், மலகூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதோடு. சங்கமங்கிராமத்தில் 573,500.00 ரூபாய் செலவில் மலசலகூடம் ஒன்றும் அதற்கான சுற்றுவேலியும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க

சம்மாந்துறையில் 20 வீடுகளும் நாவிதன்வெளியில் 19 வீடுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட சமூக புனர்வாழ்வு அபிவிருத்தி செயற்திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைக்கப்பட்ட சமூக புனர்வாழ்வு அபிவிருத்தி செயல் திட்டத்தின் கீழ் CA நிறுவனத்தின் 19,600,000/= நிதியுதவியுடன் சம்மாந்துறை பிரதேசத்தில் 20 நிரந்தர வீட்டுகளும், நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 19 வீடுகளும் அமைக்கப்பட்டதோடு புனரமைப்பு வீட்டுத்திட்டத்திற்காக 85 பயனாளிகள் நாவிதன்வெளிப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு DCA / FCA நிறுவனங்களின் 25,625,000/= நிதி உதவியுடன் இவ்வீடுகள் புனரமைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
மேலும் படிக்க

15 பாலர் பள்ளிகளில் 500 பாலர் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குகிறது

அமைப்பின் செயற்பாட்டுப் பிரதேசங்களான பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, கல்முனை, சம்மாந்துறை, நாவிதன்வெளி ஆகிய பிரதேசங்களில் சத்துணவு வழங்குவதற்காக 15 முன் பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுDCA, Diakonia நிறுவனத்தின் 1,000,000/= நிதியுதவியுடன் அப் பாலர் பாடசாலைகளில் பயிலும் 500 சிறுவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

கல்வி உதவித் திட்டத்தில் 150 A/L மாணவர்களுக்கு 7 பிரிவுகளில் 12 மாதங்களுக்கு மாதம் 75,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

கல்வி உபகார நிதி வழங்கல் செயற்பாட்டின் கீழ் பொத்துவில், திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு ஆகிய 7 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், தெரிவு நிபந்தனையின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 150 உயர்தர மாணவர்களுக்கு கல்வி உபகார நிதியாக மாதாந்தம் 75,000/= வீதம் 12 மாதங்களுக்கும் 900,000/= வழங்கப்பட்டது.
மேலும் படிக்க

சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புகள்

கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2008ம் ஆண்டில் கா.பொ.த சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கான மீட்டல் வகுப்பானது DCA, Diakonia நிறுவனத்தின் நிதியுதவியுடன் 493,000.00 ரூபாய் செலவில் திருக்கோவில், நாவிதன்வெளி, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் நடாத்தப்பட்டது. இதில் 611 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் படிக்க

தச்சு மற்றும் உழவு இயந்திரம் பழுதுபார்க்கும் பயிற்சி மையங்களை உருவாக்குதல், 6 பிரிவுகளில் 174 இளைஞர்களுக்கு பலதரப்பட்ட திறன் மேம்பாடு படிப்புகளுக்கு பயனளித்தல்

உலக கனேடிய பல்கலைக்கழக நிறுவனத்தின் நிதி உதவியுடன் 50 இலட்சம் ரூபாய் செலவில் பொத்துவில் பிரதேசத்தில் தச்சுத்தொழிற்பயிற்சி நிலையமும், நாவிதன்வெளி பிரதேசத்தில் உழவு இயந்திரம் திருத்தும் பயிற்சி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளதோடு 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 174 இளைஞர், யுவதிகளை உள்ளிணைத்து 4இ722இ100.00 ரூபாய் ODW அமைப்பின் நிதி உதவியுடன்; உழவு இயந்திரம் திருத்துதல், வீட்டு மின்னிணைப்பு, குளிரூட்டல்; பயிற்சி, கணினிப் பயிற்சி, வீட்டுமின் உபகரணம் திருத்துனர் பயிற்சி, தையல்;…
மேலும் படிக்க