தொழில் பயிற்சி வழங்கல் செயற்திட்டத்தின் கீழ் WUSC அமைப்பின் நிதி உதவியுடன் பயிற்சிக்கான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதோடு, மோட்டார் சைக்கிள்; திருத்தும் பயிற்சி, மின்னிணைப்பு, தச்சுப் பயிற்சி, ஆகிய பயிற்சி நெறிகளும், ILO அமைப்பின் நிதி உதவியுடன் சாரதி பயிற்சி நெறிகளும் நடாத்தப்பட்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட பயிற்சியாளர்களுக்கான நிவார உதவித்திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.
ஒதுக்கப்பட்ட முதியோரின் வாழ்க்கையில் புத்தொழியூட்டும் நோக்கில் Helpage நிறுவனத்தின் நிதி உதவியுடன் சிறுகைத்தொழில்களை மேற்கொள்ளும் முதியோர்களுக்கு தொழில் மேம்பாட்டுகான கடனுதவிகளும், வைத்திய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.
சிவசரிட்டி (Sivacharity) நிறுவனத்தின் 8 இலட்சம் ரூபா செலவில் 5 முன்பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர் பாதுகாப்பு இலங்கை அமைப்பின் ; (SCiSL) 70,000.00 ரூபா செலவில் 3 தற்காலிக பாலர் பாடசாலைகள் திருக்கோவில், காரைதீவுப் பிரதேசங்களிலும், GVCஅமைப்பினால் கல்முனைப் பிரதேசத்தில் 2 பாலர் பாடசாலைகளும், உலக கனேடிய பல்கலைக்கழக (WUSC) நிறுவனத்தின் 275,000.00 ரூபா செலவில் 8 பாலர் பாடசாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. CIDA – Fit நிறுவனம் நலன்புரி நிலையங்களிலுள்ள…