இத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கஞ்சிகுடியாறு, தாண்டியடி, வினாயகபுரம் -1,2,3,4, தங்கவேலாயுதபுரம், காஞ்சிடங்குடா, சிறிவள்ளிபுரம், குடிநிலம், சாகாமம் ஆகிய 11 கிராம சேவர் பிரிவுகளில் இருந்தும் தேசிய அடையாள அட்டை, பிறப்பு பதிவு, மரண பதிவு போன்ற ஆவணங்கள் இல்லாதோர் 560பேர் இனங்காணப்பட்டு NRC ஊடாக அவர்களுக்கான ஆவணங்கள் பெற்றுகொடுக்கப்பட்டுள்ளன.