விவசாய சங்கங்களை வலுப்படுத்தி, விவசாயிகளின் அறிவு, திறன் மற்றும் தொழில் நுட்பத்தினை விருத்தி செய்வதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து பொருளாதார மேம்பாட்டை அடையும் பொருட்டு லுத்தரன் உலக நிவாரண (LWR) அமைப்பின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விவசாயபெறுமதிசேர் மேம்பாட்டு செயற்திட்டம் அமைப்பினால் இத்திட்ட அமுல்படுத்தல் தொடர்பான மாவட்டமட்ட விரிவுரையாக்கக் கலந்துரையாடலானது 12.06.2011ம் திகதி அம்பாறை, மாவட்ட அரச அதிபர் காரியாலயத்தில், திரு.சுணில்கன்னங்கரா (GA) அவர்களின் தலைமையில் அமைப்பினால் நடாத்தப்பட்டது. இக்கலந்துரையாடலில் அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர், விவசாய திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், இத்திட்டச் செயற்பாட்டுப் பிரதேச செயலாளர்கள், வர்த்தக சங்கம், மாவட்ட திட்டமிடல் அலுவலர்கள், கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு.தட்சணாமூர்த்தி ஆகியோர் உட்பட 30பேர் கலந்துகொண்டனர்.