வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறைப் பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட 09 அங்கத்தவர்களுக்கு அவர்களின் சுயதொழிலை மேம்படுத்தும் முகமாக சுவாட் அமைப்பினால் கடன் உதவி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வானது 12.06.2024 ம் திகதி சுவாட் சம்மாந்துறைப் பிரதேச அலுவலகத்தில் இப்பிரதேச முகாமையாளர் செல்வி.S.Jathursha அவர்களின் தலைமையில் இடம் பெற்றதோடு, இந்நிகழ்வில் மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலய அதிபர். திரு. ஆனந்தம் சதானந்தா அவர்கள் பிரமுகராக கலந்துகொண்டு தற்போதைய கால சூழலில் சுய தொழிலின் முக்கியத்துவம் குறித்தும், வீட்டுத்தோட்ட நன்மை தொடர்பாகவும் சில கருத்துக்களை வழங்கி காசோலையினை வழங்கிவைத்தார்.