சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கள மட்டச் செயற்பாட்டு முன்னேற்றங்கள் குறித்த வாராந்த மீளாய்வுக் கலந்துரையாடலானது இன்று 16.02.2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் Teams இணைய செயலியினூடாக இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் முகாமைத்துவசபை உறுப்பினர்கள், பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச முகாமையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.