சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

பிரதேச ரீதியான கள விஜயமும், குழுத்தலைவிகளுடனான கலந்துரையாடலும் – 02.02.2024

சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்த பிரதேச மட்ட கண்காணிப்பு நடவடிக்கையானது 02.02.2024ம் திகதி பொத்துவில் மற்றும் திருக்கோவில் பிரதேசங்களில் சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும் இணைப்பாளருமான திரு.ச.செந்தூராசா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது பிரதேச மட்டத்தில் நடைபெறுகின்ற செயற்பாட்டுகள் குறித்த முன்னேற்றங்கள், காணப்படும் குறைபாடுகள், பிரச்சினைகள் குறித்தும் அவை தொடர்பில் குழுத் தலைவிகள், நிர்வாகிகள், களமட்டப் பணியாளர்களினால் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைககள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் சுவாட் அமைப்பின் தலைவி.திருமதி.கஜேந்தினி சுவேந்திரன் அவர்களும் மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாட்டு பணிப்பாளர் திரு.S. ஆனந்தராசா அவர்களும் மற்றும் பிராந்திய இணைப்பாளர்கள், பிரதேச மட்ட முகாமையாளர்கள், களப்பணியாளர்கள், குழுத்தலைவிகள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave A Comment