சமூக நல அமைப்பு அம்பாறை மாவட்டம் இணையதளத்திற்கு வரவேற்கிறோம்

SWOADSWOADSWOAD

திட்டமிடல் கலந்துரையாடல். – 13.06.2024

சுவாட் அமைப்பின் எதிர்கால செயற்திட்டங்கள், கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்த உபாயத் திட்டமிடல் குறித்த கலந்துரையாடலானது 13.06.2024ம் திகதி சுவாட் தலைமை அலுவலகத்தில் ஸ்தாகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் பிரதேசமட்ட, தலைமையலுவலக சகல பணியாளர்களும் கலந்துகொண்டு நிறுவன மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து தமது கருத்துக்களை முன்வைத்ததுடன், செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் சவால்கள், பிரச்சினைகள் குறித்தும் பிரதேச ரீதியாக ஆராயப்பட்டு அவற்றுக்கான மாற்று உபாயத்திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டன.

Leave A Comment