23.02.2024ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30 தொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை சுவாட் அமைப்பின் பணியாளர்களுடனான திட்டமிடல் கலந்துரையாடலானது ஸ்தாகர் திரு.ச.செந்தூராசா அவர்களின் தலைமையில் சுவாட் தலைமையலுவலக பயிற்சி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கிராம மட்டத்தில் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற நிறுவன ரீதியான செயற்பாடுகளுக்கான முன்னேற்றங்களை குறிகாட்டிகளுடன் அடைவுகளை கண்டுகொள்ளத்தக்கதாக எவ்வாறு ஒவ்வொரு பணியாளரும் தமது செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும் என்பது குறித்த தெளிவூட்டலும், அவற்றை செயற்படுத்துவதில் எதிர்நோக்கும் சவால்கள், பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் தலைமையலுவலக, பிரதேசமட்ட சகல பணியாளர்களும் கலந்துகொண்டனர்.