18.12.2023 ம் திகதி VOM (Voice of Migration) ஏற்பாட்டில் கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் புலம்பெயர் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் விசேட அதிதியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ Manusha Nanayakkara மற்றும் SDC, Helvetas, Solitaries போன்ற நிதி நிறுவன பிரதிநிதிகளும், ஏனைய சிவில் அமைப்புக்களும் பங்குபற்றியிருந்தனர். இதில் சுவாட் அமைப்பின் சார்பில் திரு.ச. ஆனந்தராசா மற்றும் சம்மாந்துறை, இறக்காமம் புலம்பெயர் சங்கத்தலைவிகளும் பங்குபற்றியிருந்தனர்.