சர்வதேச புலம்பெயர் தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை கௌரவிக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலகத்துடன் இணைந்து SWOAD அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இறக்காமம் பிரதேச செயலாளர் ஜனாப் எம்.என். நசீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுயேட்சை கள இணைப்பாளர் ஐ.முஹம்மது இல்மி, ஜே.ஜெகனேஸ், களப்பணியாளர் நிலுஜா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர், புலனாய்வு ஆணையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்