சுவாட் அமைப்பினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற செயற்பாடுகளை கிராம மட்டத்தில் முன்னெடுத்துச் செல்வதில் காணப்படும் நடைமுறை ரீதியான பிரச்சினைகள் குறித்து அங்கத்தவர் மத்தியில் ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வினை வழங்கும் நோக்கிலும், தற்போதைய காலத்திற்கேற்ப பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளில் மக்கள் தம்மை தயார்படுத்திக்கொள்வதற்குத் தேவையான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கி சமூகப் பொருளாதார மேம்பாட்டில் பங்களிப்புச்செய்யும் முகமாகவும், சுவாட் அமைப்பின் ஸ்தாபகரும், இணைப்பாளருமான திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று 09.10.2024ம் திகதி காரைதீவு பிரதேசத்தில் இப்பிரதேச முகாமையாளர் திருமதி.சசிகலா அர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் இப்பிரதேசத்திற்கு தலைமை அலுவலக ரீதியில் பொறுப்பாளரான சேமிப்புக்கடன்திட்ட முகாமையாளர் திருமதி.K.பிரியந்தினி அவர்களும் மற்றும் பிராந்திய இணைப்பாளர்கள், இப்பிரதேச கள உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.