SWOAD நிறுவனமானது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதனை உரிய உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் கடந்த 21.01.2024ம் திகதி சுவாட் நிறுவனத்தின் அக்கரைப்பற்றில் உள்ள தலைமையலுவலகத்தில் அந்நிறுவனத்தின் ஸ்தாபகரும். இணைப்பாளருமான திரு.எஸ்.செந்துராசா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது
இதன்படி இக்கூட்டத்தில் தற்போது விவசாயிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. மேலும் இக்கலந்துரையாடலுக்கு விவசாய அமைப்புக்களின் தலைவர்கள், நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் சுவாட் அமைப்பின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். மேலும் விவசாயிகள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக சரியான தகவல்களை திரட்டி தொழில்நுட்ப அறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.