SWOAD நிறுவனத்தின் கீழ் இயங்கிவருகின்ற புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் செயற்பாடுகள் மற்றும் அவர்களின் அனுபவங்களை கற்றுக் கொள்ளும் முகமாக ஹற்றன் நுவரேலியா மாவட்டத்தில் பணிபுரிகின்ற PREDO நிறுவனத்தின் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கடந்த 02.12.2023ம் திகதி சம்மாந்துறைப்பிரதேசத்தில் கள விஐயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். சுவாட் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் க.பிறேமலதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் குறிப்பாக சுவாட் நிறுவனத்தின் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் செயற்பாடுகள் , அனுபவங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது எதிர்கொண்டு வருகின்ற பிரச்சினைகள் தொடர்பாக சம்மாந்துறை புலம்பெயர் தொழிலாளர் சங்கத்தின் தலைவி திருமதி ஆயிசா மற்றும் ஏனைய நிருவாகிகள் அங்கத்தவர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டது.
மேலும் இக்கலந்துரையாடலில் PREDO நிறுவனத்தின் தலைவர் திரு. Michal Joachim மற்றும் ஏனைய PREDO நிறுவனத்தின் புலம்பெயர் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்கள் அவர்கள் செய்கின்ற வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது