வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் கடன் பெற்று சுயதொழில்களை மேற்கொள்ளும் அங்கத்தவர்களுக்கு அவர்கள் பெற்றுக்கொள்ளும் கடனை சரியான முறையில் முதலீடு செய்யவும், சரியான பொருட்கொள்வனவுகளை மேற்கொள்ளவும், சந்தைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளவும் போதுமான ஆலோசனை வழிகாட்டல்களை மேற்கொள்ளும் முகமாக காரைதீவுப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான கலந்துரையாடலானது 04.11.2024ம் திகதி சுவாட் காரைதீவு பிரதேச அலுவலகத்தில் இப்பிரதேச முகாமையாளர் திருமதி.சசிககலா அவர்களின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சமூக அபிவிருத்திச் செயற்பாட்டு பணிப்பாளர் திரு.ஆனந்தராசா அவர்களினால் நடாத்தப்பட்டது. இதில் இப்பிரதேச பிராந்திய இணைப்பாளர் திரு.நதிவரன் அவர்களும் கலந்துகொண்டார்.