சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் குறித்த பிரதேச மட்ட கண்காணிப்பு நடவடிக்கையானது சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்தூராசா அவர்களினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கமைவாக காரைதீவு மற்றும் கல்முனை பிரதேச கள விஜயமானது 10.02.2024ம் திகதி மேற்கொள்ளப்பட்டதுடன், இதன்போது இடம்பெற்ற குழுத்தலைவிகளுடனான சந்திப்பில் சுவாட் அமைப்பின் தலைவி.திருமதி.கஜேந்தினி சுவேந்திரன் அவர்களும் மற்றும் பிராந்திய இணைப்பாளர். திரு.நிரோசாந்தன், திரு.சதீஸ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.