கிராம மட்டத்தில் துரைசார் நிபுணர்களை அழைத்து அவர்களினால் வழங்கப்படும் சேவைகள் குறித்தும், அவற்றை பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் குறித்தும் விப்புணர்வுகருத்தரங்குகள் சுவாட் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனூடாக கிராம மட்டங்களில் அடையாளம் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு இலகுவில் துறைசார் உத்தியோகத்தர்களை அணுகி தீர்வுகாண்பதற்கும், அவர்களுடனான சிறந்த தொடர்பை ஏற்படுத்திகொள்ளக்கூடியதற்குமான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அமைப்பின் செயற்பாட்டு பிரதேசங்களான 6 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இவ்வருடம் 36 விழிப்புணர்வு கருந்தரங்குகள் நடாத்தப்பட்டுள்ளதுடன் இதில் 1328 பேர் கலந்துகொண்டு துறைசார் ரீதியான விழிப்புணர்வைப் பெற்றுள்ளனர்.