சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்புக் கலாசார மண்டபத்தில் 2006.10.30ம் திகதி முதியோர் தினம் வெகு சிறப்பாக அமைப்பினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் செயற்பாட்டுப் பிரதேசங்களுக்குட்பட்ட முதியோர் 400 பேர் கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் Help Age நிறுவனம் சார்பாக நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் சிறீதர் அவர்களும், திட்ட உத்தியோகத்தர் சம்சுடீன் அவர்களும், அமைப்பின் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.