வாழ்வாதார உதவிகளுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வு - 16.06.2016


img

சுவாட் அமைப்பினால் UNDP நிறுவனத்தின் உதவியுடன் மாவட்ட அபிவிருத்தி திட்டத்திற்கான உதவி (SDDP) வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு, சம்மாந்துறை மற்றும் இறக்காமம் போன்ற பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்டுள்ள சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற 775 குடும்பங்களின் வருமானத்தினை அதிகரிக்கும் நோக்கில் சுமார் 17மில்லியன் ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது 16-06-2016ம் திகதி, சுவாட் நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று சுவாட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் திரு.துசித்த பி வனிகசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், உள்ளுர் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.

img img img img img img img img img img img img img img img img